Tamil Cinema News | சினிமா செய்திகள்
சோனா அப்படி பேசியது உண்மையா? வழக்கறிஞர் போட்ட வழக்கு
நடிகை சோனா தனது கவர்ச்சியால் ஒரு காலத்தில் தமிழகத்தை கனவில் மிதக்க வைத்தவர். அந்த அளவுக்கு கவர்ச்சி கலந்த வேடங்களில் அதிகமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார். வயது ஆக ஆக மவுஸ் மேலும் நல்ல படங்களை தேர்வு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு வார இதழுக்கு பேட்டி அளிக்கையில், அவர் ஆண்களை பற்றி தவறாக கூறியதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் நான் அப்படி கூறவில்லை என சோனா தரப்பில் இருந்து விளக்கம் வந்தது.
மேலும் ஆண்கள் பாதுகாப்பு சங்க உறுப்பினரான வழக்கறிஞர் அருள் மிதுலன், அசிங்கமாக பேசிய நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 இன் படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ஏற்க கூடாது என சோனா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை வருகிற டிசம்பர் 16ஆம் தேதி விசாரிப்பதாக நீதி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
