Connect with us
Cinemapettai

Cinemapettai

sneha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆன்ட்டியாக மாறிய சினேகா.. வெயிட் போட்டாலும் சும்மா கும்முன்னு இருக்காங்களே!

கோலிவுட்டில் 2000 ஆம் ஆண்டுகளில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் தான் சினேகா, இவர் ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால்பதித்தார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல், தனுஷ் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

அதேபோல் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் பிரசன்னாவிற்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

sneha-123

sneha-123

இந்த நிலையில் நடிகை சினேகா மறுபடியும் குண்டாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. அதாவது நடிகை சினேகா தனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறினார்.

sneha-1234

sneha-1234

மேலும் நடிகை சினேகாவின் இந்த மாற்றத்தை பார்த்த பலரும் வாயடைத்துப் போயினர். இப்படி இருக்க தற்போது சினேகா மீண்டும் உடல் எடை கூடி குண்டாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படத்தில் சினேகா கருப்பு நிற உடையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கின்றன.

Continue Reading
To Top