Connect with us
Cinemapettai

Cinemapettai

silk-smitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சில்க் ஸ்மிதா இறந்ததற்கு நான்தான் காரணம்.. கண்ணீர் விடும் முன்னாள் நடிகை

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா மட்டுமே. கவர்ச்சி, குணச்சித்திரம், நடனம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து 80களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய ராஜ்யத்தை நிலைநாட்டியவர்.

இன்று வரை அவருக்கு நிகர் அவரே. 90களில் கோடிகோடியாக சம்பாதித்த ஒரே நடிகை. இவருடைய பெயர் இடம்பெறாத படங்களே இல்லை. இன்றும் சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகையாக இருந்து வருகிறார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது சினிமா உலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு காரணம் தனிமையில் இருந்து வந்த சில்க் ஸ்மிதாவுக்கு அரசியல்வாதிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது என பல தரப்பில் பேசப்பட்டது.

சில்க் ஸ்மிதாவின் மீது கண்வைக்காத ஆட்களே இல்லை. அன்றைய நாட்களில் இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் தன் காந்த பார்வையால் அலைய விட்டவர். ஆனால் சமீபத்தில் நான் அன்று இரவு சென்று இருந்தால் சில்க் ஸ்மிதா இன்று நம்முடன் இருந்திருப்பார் என பிரபல முன்னாள் நடிகை அனுராதா சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

anu-radha

anu-radha

அவர் கூறியதாவது, அன்றைய காலகட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழி நான் தான் எனவும். தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் இரவு சில்க் ஸ்மிதா தனக்கு போன் செய்து, தன்னிடம் பேசவேண்டும் போல் இருப்பதாக தெரிவித்து, வீட்டுக்கு வரமுடியுமா? எனக் கேட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் குழந்தையை பாதுகாக்க வேண்டி இருந்ததால்தான் அவருடைய அழைப்பை நிராகரித்து விட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அடுத்தநாள் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு தன் இதயமே நின்று விட்டது போலாகி விட்டது எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சில்க் ஸ்மிதாவின் நண்பர் திருப்பதி ராஜன் என்பவரும் சில்க் ஸ்மிதாவை பலமுறை சந்திக்க சென்றதாகவும், ஆனால் அவரது வீட்டில் எப்போதுமே சில தடியன்கள் தன்னை சந்திக்கவிடாமல் தடுப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் வென்ற நாயகிகள் சக வாழ்க்கையை வெல்ல முடியவில்லை என்பது பெரும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top