Connect with us

Cinemapettai

எங்க அப்பா அம்மா பிரிஞ்சு போனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. ஸ்ருதிஹாசனின் பகீர் பேட்டி

shruthi-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எங்க அப்பா அம்மா பிரிஞ்சு போனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. ஸ்ருதிஹாசனின் பகீர் பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் மகள் சுருதிஹாசன். இவர் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே பெரிய ஹிட்டானது. இதனால் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

இடையில் காதல் பிரிவு காரணமாக சில நாட்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஸ்ருதிஹாசன், தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மிகவும் சந்தோசம் தான் எனக் கூறியது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அவர் கூறியதாவது, திருமணமான புதிதில் எனது அப்பாவும் அம்மாவும் சரியான புரிதலின்றி அடிக்கடி சண்டை செய்து கொண்டு வந்தனர். இடையில் திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அவர்கள் பிரிந்தது எனக்கு முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. பிறகு அவர்கள் ஒன்றாக இருந்தால் சண்டை போட்டுக்கொண்டே காலம் முழுக்க வாழ வேண்டியிருக்கும்.

ஆகையால் தற்போது பிரிந்து அவரவர் பாதையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர். அதைத்தான் விரும்புவதாகவும் அதனால்தான் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் எடுக்கவில்லை என்றும் தெளிவாக கூறினார்.

என்ன இருந்தாலும் தனது பெற்றோர்களைப் பற்றி இந்த மாதிரி சுருதிஹாசன் கூறியது தவறு என்று சிலர் கருதுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top