நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் கடைசியாக நடித்த சிங்கம் 3 படம் தமிழகத்தில் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. அதன் பிறகு அவர் படங்களை தனது நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்தார்.

அந்த வரிசையில் அவர் இயக்குனர் சுந்தர் சி யின் கனவு படமான சங்கமித்ரா என்ற வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதி போர்வீராக நடிக்கவுள்ளார்.

இதற்கான நடிப்பு , சண்டை பயற்சி போன்ற விஷயங்கள் லண்டனில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட வாள்சண்டை போடும் பயிற்சி புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார் ஸ்ருதி, இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது .