Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களின் செயலால் பதறியடித்து ஓடிய ஸ்ருதிஹாசன்.. கடை திறப்பு விழாவில் பங்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் ஆவடி அருகே புதிய பல்பொருள் அங்காடி ஒன்றை திறந்து வைக்க வந்த போது ரசிகர்களின் தள்ளுமுள்ளால் பதறியடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடை திறப்பு விழாவிற்கு வந்து காரை விட்டு இறங்கிய உடனேயே இளம் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அதே நேரத்தில் கடைக்காரர்களும் போதிய பாதுகாப்பு வசதியை செய்யவில்லை.
இதனால் மிகவும் பதற்றமடைந்த ஸ்ருதி ஹாசன் தட்டுத் தடுமாறிக் கொண்டே சென்று கடையை திறந்து வைத்தார். மேலும் நான்காவது மாடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டத்தில் கட்டுப்பாடு தளர்ந்தது. இதனால் மேலும் பதறிய ஸ்ருதி, ஆள விட்டா போதும்டா சாமி என பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.
இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
