Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொது மேடையில் மைக்கை பிடித்து சண்டை போட்ட நடிகை சிருஷ்டி.. பரபரப்பில் முடிந்த நிகழ்ச்சி
சத்ரு என்ற படத்தில் கதிர் சிருஷ்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அம்பரீஷ் இசையமைத்திருந்தார்.
பொதுமேடையில் சண்டை போட்ட நடிகை சிருஷ்டி
சத்ரு என்ற படத்தில் கதிர் சிருஷ்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அம்பரீஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
இசையமைப்பாளர் அம்பரீஷ் பேசும் பொழுது இந்த படத்தில் 4 பாடல்கள் என்று கூறினார்கள், பின்னர் இரண்டு பாடல்கள் என்று குறித்தார்கள் பின்னர் இன்னும் கொஞ்சம் குறைத்து பாடல்களே இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள். எனக்கும் இந்த படத்தில் வேலையே இல்லாமல் போய்விட்டது என்று கூறினார்.
ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்புக்கு பாடல்கள் தேவை இல்லை என நான் புரிந்து கொண்டேன். என்னை போலவே நடிகை சிருஷ்டிக்கும் இந்த படத்தில் வேலை இல்லை இந்த படம் ஹீரோ சப்ஜெக்ட் படம் என கூறினார்.
இதனால் கோபம் அடைந்த நடிகை சிருஷ்டி மேடையிலேயே இசையமைப்பாளரை கேள்வி கேட்டு தொலைத்துவிட்டார். இதனால் அந்த நிகழ்ச்சி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
