fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவுடன் நடித்த சின்ன பொண்ணா இது! இப்போ இப்படி மாறிட்டாங்களே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுடன் நடித்த சின்ன பொண்ணா இது! இப்போ இப்படி மாறிட்டாங்களே

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர்கள் பலர் உள்ளனர். ஏன் தல அஜீத்தின் மனைவி ஷாலினி கூட குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான். நடிகை மீனாவும் சிறுவயதிலிருந்தே நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார்.

ரஜினி நடித்த எந்திரன் படத்திலும் ஒரு காட்சியில் வந்து செல்வார். இவர் தற்போது தெலுங்கு சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாவார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

22 வயதான இவர் தற்போது கப்பல் மூலம் கடலில் பயணம் செய்யும்போது கிளாமர் உடையில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோவுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top