Tamil Cinema News | சினிமா செய்திகள்
லண்டன் போலீசில் கைதான ஸ்ரேயா.. அட! இதுகெல்லாமா புடிப்பிங்க
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நாயகி ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு தொட்டதெல்லாம் தூள் தான் என்பதை போல தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெகு விரைவில் பெரிய நடிகையாக உயர்ந்தார்.
அதன்பிறகு வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி இருந்தார். அதனால் இவரின் மவுசு குறைந்து விட்டதாக அப்பொழுது பல பத்திரிகைகளில் வெளிவந்தது.
இருந்தும் அவ்வப்போது இரண்டாவது கதாநாயகியாக தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்தார். சுத்தமாக பட வாய்ப்பே இல்லாத நிலையில் தனது காதலரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
அங்கிருந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வந்த ஸ்ரேயாவுக்கு விமல் நடிப்பில் சண்டக்காரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது போலீசாரால் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளார். இதனால் உடனடியாக உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பல முன்னணி செய்தித்தாள்களில் இந்த செய்தி வெளிவந்தது.
இது எந்த அளவு உண்மை என்பதை படக்குழு தான் சொல்ல வேண்டும். காத்திருப்போம்!
