வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

உள்ளாடை போட்டு, ஊருக்கு உபதேசம் செய்த நேர்கொண்ட பார்வை நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

தென்னிந்திய மொழிகளில் தற்போது ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கும் நடிகைதான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்திருந்த ரோலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அதேபோல் ஷ்ரத்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஷ்ரத்தா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு பலரை உச்சுக் கொட்ட வைத்துள்ளார்.

nerkonda-paarvai
nerkonda-paarvai

அதாவது வாட்ச்மேன், பப்பி, கோமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமான சம்யுக்தா ஹெக்டே, பொது இடத்தில் அரைகுறை ஆடையில் வந்ததால் அடி வாங்கிய சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றிய வீடியோவை சம்யுக்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விஷயம் குறித்து சமந்தாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

Shraddha-Srinath-cinemapettai

அந்த வகையில் சம்யுக்தாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதுகுறித்து ஷ்ரத்தா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், ‘ஒரு ஆண் சட்டை இல்லாமல் போகலாம், ஆனால் ஒரு பெண் சட்டை இல்லாமல் போனால் தவறா? என்றும், சம்யுக்தா தனது உரிமையை பெறுவதற்காக போராடியதை பாராட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா? அப்ப நீங்களே உங்களை ரசிக்க ஆரம்பியுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

- Advertisement -

Trending News