Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் உடன் நடித்ததே எனக்கு மிகப்பெரிய கெளரவம்! லைக்ஸ் குவிக்குது நடிகையின் உணர்ச்சிகரமான பதிவு

நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை பற்றி ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டேட்டஸ் வைத்தார்.

நேர்கொண்ட பார்வை –  பாலிவுட் படமான பிங்கின் அதிகாரபூர்வ ரிமேக். நாட்டிற்கு தேவையான மெஸேஜ் சொல்லும் கோர்ட் ட்ராமா படம். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருப்பார். ஹிந்தியின் ஒரிஜினல் வெர்ஷன் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களிடம் தான் ஹிட். தமிழ் வெர்ஷன் பட்டி தொட்டி அனைத்தும் ரீச் ஆனதுக்கு அஜித் நடித்ததே காரணம். பெண் சுதந்திரம், NO MEANS NO என பல விஷயங்களை இப்படத்தில் நாம் பார்க்கலாம்.

இப்படத்தின் நாயகி மீரா ரோலில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் பதிவிட்ட ஸ்டேட்டஸ் இதோ ..

“இந்த சத்தம் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நன்றி. நேர்கொண்ட பார்வை ஒரு வருடம் நிறைவு அடைந்திருக்கிறது” என தல ரசிகர்களின் மாஸ் பற்றி போட்டோ பதிவிட்டார்.

shradha srinath cinemapettai

“ஒரு மெகா ஸ்டார் அனைத்து மாஸ் விஷயங்களையும் ஒதுக்கி விட்டு
கருத்தை மையப்படுத்தும் இப்படி பட்ட ஒரு படத்தில் நடித்திருக்கிறார். நாம் வெளிப்படையாக பேசாத விஷயங்கள் பற்றி இந்தப் படம் பேசுகிறது. தல உடன் நடித்தது எனக்கு மிகப் பெரிய கௌரவம்”. என தல அஜித் பற்றியும் படத்தினை பற்றியும் பதிவிட்டுள்ளார்.

shradha srinath cinemapettai

“மீரா வலிமையான மற்றும் உறுதிமிக்கவள். அவர் ஒரு போராளி. அவர் கையில் எப்போதும் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு இருப்பார். அதிகம் வெப்பத்தை உணர்ந்தால் அதை கொண்டு அவரது தலை முடியை கட்டிக் கொள்வார்.

shradha srinath cinemapettai

அவர் எப்போதும் அவரை நம்பியே இருக்கிறார். அவரை போல எப்போதும் இருங்கள்.” என இன்றைய பெண்களுக்கு அறிவுரையும் சொல்லியுள்ளார்.

Continue Reading
To Top