இந்த நடிகை பேரழகு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், இவர் அழகு. பெரிதாக ஒப்பனை இல்லாவிட்டாலும், பார்ப்பதற்கு நம் வீட்டில் உள்ள ஒரு பெண் போல் சாதாரண அழகு தான்.

தனது இயற்கையான நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 14 வயதில் உச்சநட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு இணையான நடிப்பை வெளிகாட்டினார்.

அதிகம் படித்தவை:  பாரதிராஜா இயக்கி நடிக்கும் "ஓம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பின்னர், அந்த தொப்பி இயக்குனர்  இயக்கிய படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல், அவருக்கோ வயது நடிகையை விட இருமடங்கு. ஆனால், காதலுக்கு அழகு வயது எல்லாம் தெரியுமா என்ன?

இயக்குநருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள் உருண்டோடின. திடீரென ஒரு நாள், நடிகை தூக்கில் தொங்கி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

அதிகம் படித்தவை:  biggboss-ல் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் நம்ம டிடி.!!!

இந்த செய்தியை கேட்டு திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது மட்டுமில்லாமல், திறமையான நடிகையை இழந்ததற்காக வருந்தியது. அவருடைய மரணத்திற்கு தொப்பி இயக்குனர்  தான் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை அவருடைய மரணத்திற்கு என்ன காரணம், யார் காரணம் என தெரியவில்லை. காலத்தின் சுழற்சியில் அந்த தொப்பி இயக்குனரும்   காலமானார்.