fbpx
Connect with us

Cinemapettai

சின்னத்திரையில் தொடரும் கள்ளக்காதல்.. கையும் களவுமாக சிக்கிய பிரபல விஜய் டிவி ஜோடி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சின்னத்திரையில் தொடரும் கள்ளக்காதல்.. கையும் களவுமாக சிக்கிய பிரபல விஜய் டிவி ஜோடி

சினிமாவை விட சீரியல் நடிகர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. சமீபத்தில்தான் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் கள்ள உறவு பிரச்சனையை வெடித்து அவர்களது குடும்ப வாழ்க்கை சந்தி சிரித்தது.

இன்னும் அந்த பிரச்சனையை கூட முடியாத நிலையில் மீண்டும் ஒரு சின்னத்திரை ஜோடியின் கள்ளக் காதல் பிரச்னை பூதாகரமாகி உள்ளது. ஆம். பகல் நிலவு சீரியலில் நடித்த அசீம் மற்றும் சிவானி நாராயணன் ஆகியோரின் கள்ளத்தொடர்பு தான்.

இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்தனர். மீண்டும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலிலும் நாங்கள் தான் நடிப்போம் என அடம்பிடித்து இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போதிலிருந்தே அசீம்க்கும் அவரது மனைவி சோயா என்பவருக்கும் இடையே பிரச்சனையை துவங்கியுள்ளது.

அசீம் மற்றும் சோயா இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அசீம், சிவானி ஆகியோருக்கு இடையே நெருக்கம் அதிகமாக இருந்ததை அறிந்த சோயா, பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

மேலும் ஷிவானிக்கு 19 வயதுதான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அசீம் மேல்தான் தவறு இருப்பதாகவும், அசீம் தான் சிவானிக்கு ஆசை வார்த்தை காட்டி மயக்கியதாகவும் தெரிகிறது.

இவர்கள் இருவரும் தான் சிறந்த புதுமுக ஜோடிகள் என விருது கொடுத்து உசுப்பேத்தியதுதான் இவ்வளவுக்கும் காரணம் என புலம்புகிறாராம் சோயா. கள்ளகாதல் தவறில்லை எனக் சட்டமே இருக்கிறது என்று ஒரு குரூப் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சம்பவம் ஒன்று நடக்கும்போது சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தருக்கு விவரம் தெரிஞ்ச பத்தாது?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top