பிரபலத்தின் மகள், கண்கள் கூசும் அளவிற்கு நடந்து கொண்ட மோகன் லால்.. கூட இருந்த மம்மூட்டி, போட்டுடைத்த பிரபலம்

Mohan lal: தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய சினிமா ரசிகர்களை கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அதற்கெல்லாம் திருஷ்டி படும் விதமாக வெளியானது தான் ஹேமா கமிட்டி அறிக்கை.

2018 ஆம் ஆண்டு அப்போதைய மலையாள சினிமாவில் இருந்த நடிகைகள் எந்த மாதிரி பிரச்சனை எல்லாம் சந்தித்தார்கள் என இந்த கமிட்டி ஒரு அறிக்கையை தயார் செய்தது. அதை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 2019 ஆம் ஆண்டு ஒப்படைத்து இருந்தார்கள்.

ஒரு சில காரணங்களால் இந்த அறிக்கை வெளியிடாமல் இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனால் மலையாள சினிமாவில் ஒரு பெரிய பூகம்பமே ஏற்பட்டது. மோகன்லால் உட்பட மலையாள சினிமா நடிகர் சங்கத்தின் பல உறுப்பினர்கள் ராஜினாமா செய்தார்கள்.

கண்கள் கூசும் அளவிற்கு நடந்து கொண்ட மோகன் லால்

இது பற்றி நிறைய பேர் தற்போது கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் சொன்ன விஷயம் பெரிய அளவில் தற்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. மலையாள சினிமாவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஆக இருப்பவர்கள் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால்.

விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபல நடிகரின் மகள், அவரும் ஒரு நடிகை தான் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது மோகன்லால் இருக்கையில் அமர்ந்து கொண்டே மம்முட்டிக்கு சைகை கொடுத்துவிட்டு அருவருக்கத்தக்க சைகை ஒன்றை செய்தார். அதை மம்மூட்டியும் சிரித்து ரசித்தார்.

தன்னுடைய சக நடிகரின் மகளையே இப்படி நினைத்து காமெடி பண்ணும் அளவுக்கு தான் அவருடைய குணம் இருக்கிறது என சாந்தி வில்லியம்ஸ் சொல்லி இருக்கிறார். இந்த பிரச்சனை என்று இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நடிகர் மோகன்லால் பற்றி சில விஷயங்களை பேட்டி ஒன்றில் இந்த நடிகை பேசியிருந்தார்.

அவருடைய கணவர் மோகன்லாலுக்கு எப்படி எல்லாம் உதவினார் என்றும், கணவரின் மறைவுக்கு பின்னர் மோகன் லால் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டதாகவும் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருந்தார் .

தற்போது இந்த மேட்டூர் பிரச்சனையை பற்றி கருத்து கூறி இருக்கும் இவர் மலையாள சினிமாவுலகில் பல காலங்களாக இது நடந்து வருவதாகவும், இதனால் தான் நான் மலையாள சினிமா உலகிலிருந்து விலகி தமிழ் சினிமாவிற்கு வந்தேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

Next Story

- Advertisement -