தல அஜித்தின் மச்சினிச்சி பார்த்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!

அஜித்தின் மனைவியான ஷாலினியின் தங்கை தான் நடிகை ஷாமிலி. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ‘அஞ்சலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஷாமிலி.

மேலும் இரண்டு வயதில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஷாமிலி, 2009 ஆம் ஆண்டு ‘ஓய்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஷாமிலி நடித்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வீரசிவாஜி’. அதற்குப் பிறகு தமிழில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் ஷாமிலி.

இந்த நிலையில் நடிகை ஷாமிலி ஒரு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்ட வண்டியில் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி, தல ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.

மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், நீங்க அஜித்துக்கு தான் மச்சினிச்சி என்பதை மறந்துட்டீங்களா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனராம்.

அதுமட்டுமில்லாமல், இந்த புகைப்படத்தை கண்ட இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் இணையத்தில் உருவாகி உள்ளதாம்.