Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் ஷாலு ஷம்மு கேரக்டர் என்ன தெரியுமா? அட கொடுமையே
பிரபல நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் குமார் இயக்கத்தில் வெளிவந்த காவியப் படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தை பத்திரிகையாளர்கள் கழுவி ஊற்றினாலும் தியேட்டரில் முரட்டு குத்து குத்தியது உண்மை தான்.
வசூல் ரீதியாக இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்காரணமாக தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குவதுடன் கதாநாயகனாகவும் சந்தோஷ் களமிறங்க உள்ளார்.
இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடன மங்கை ஷாலு ஷம்மு நடிக்கிறார். இவர் ஏற்கனவே இவரது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான நடனங்களை தனது ஆண் நண்பர்களுடன் ஆடி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இரண்டாம் பாகத்தில் லெஸ்பியனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக படப்பிடிப்புத் தளத்தில் தனது சக நடிகை ரித்திகா அசோக் என்பவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார்.

shalu-kiss
இந்த வீடியோவை டேனி என்பவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இவர் அந்த படத்தில் காமெடியனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
