Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-shalini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் நடிக்க ஆசைப்பட்ட அஜீத் மனைவி ஷாலினி.. கசிந்த 23 வருட ரகசியம்

தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தமிழ்நாடே ஸ்தம்பித்து விடும். அந்த அளவு வெறித்தனமான ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்கள்.

தல அஜித் தன்னுடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தளபதி விஜய்யுடன் நடிக்க ஷாலினி ஆர்வமாக இருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

1997 ஆம் ஆண்டு விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் காதலுக்கு மரியாதை. மலையாளத்தில் வெளியான அணியபத்திராவ் என்ற படத்தின் ரீமேக் ஆக தமிழில் வெளியானது.

மலையாளத்தில் இந்த படத்தில் ஷாலினி தான் நடித்திருந்தார். ஆனால் தமிழில் ரீமேக் செய்து நடிக்க முதலில் ஷாலினி ஆர்வம் காட்டவில்லையாம். அதற்கு காரணம் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் அப்பாஸ் தான் நடிக்க வேண்டியது இருந்தது. ஒரு சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகவே தளபதி விஜய்யிடம் அந்த கதை சென்றுள்ளது.

தளபதி விஜய் நடிக்க ஓகே சொல்லிய உடனே, விஜய் நடித்தால் நான் நடிக்கிறேன் என ஷாலினி ஆர்வம் காட்டியதாக தெரியவந்துள்ளது. இருவரும் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அதன் பிறகு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்த போது தான் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top