Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

பணம் தர்றேன்னு சொன்னா வராங்க, மத்தபடி எதுக்கும் வர்றது இல்ல.. வாரிசு நடிகையை கிழிக்கும் தயாரிப்பாளர்

சமீப காலமாக அந்த வாரிசு நடிகை மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தனக்கு தேவை என்ற போது மட்டும் தயாரிப்பாளர்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், இல்லை என்றால் கொஞ்சம் கூட மதிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஒருவரின் மகளாக வலம் வருபவர் தான் அந்த பிரபல நடிகை. அம்மணிக்கு இக்கட தேசத்தை காட்டிலும் அக்கட தேசத்தில் மார்க்கெட் ஜாஸ்தி. அதற்கு காரணம் கிளாமர் தான்.

உங்க வீட்டு கிளாமர் இல்லை, எங்க வீட்டு கிளாமர் இல்லை. அம்மணி காட்டினால் கொக்க மக்கா கிளாமர் தான். இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகளை கதவைத் தட்டி அள்ளிக் கொடுத்தனர். சமீபத்தில் ஸ்பீடு நடிகரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த நடிகரின் நடவடிக்கைகள் சரியில்லை என படப்பிடிப்பை விட்டு வெளியேறினார்.

அந்த நடிகர் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தது தப்பா எனும் அளவுக்கு கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் சூழ்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் அந்த நடிகையின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் சமீபத்தில் அந்த நடிகைக்கு சப்போட் செய்த பிரபல இயக்குனர் தவறி விட்டார். அவருடைய இறங்களுக்குக் கூட வரவில்லை அந்த வாரிசு நடிகை. அந்த இயக்குனர் அந்த நடிகையை அனைவரையும் தவறாக பேசும் போது கூட சப்போர்ட் செய்தாராம்.

ஆனால் அவர் இறந்த பிறகு அவரை ஒரு மனிதனாக மதித்து பார்க்ககூட வரவில்லை என்பதே பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த இயக்குனர் சம்பள விஷயம் பேசும்போது மட்டும் ஒரு நாளைக்குப் பத்து முறை அவரைத் தேடி வந்த நடிகை இறந்தபோது வரவில்லை என்பது அனைவருக்குமே சங்கடத்தை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
To Top