விஜய் தொலைகாட்சி நடத்திவரும் கமல் தொகுத்துவழங்கும் biggboss நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர் இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி விஜய் தொலைக்காட்சி நடத்தும்  பிக்பாஸில் கலந்து கொண்டார்.

இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிட்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பிரபல திரையரங்கத்தின் ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.