ஈரம் பட சரண்யா மோகனுக்கு இவ்வளவு க்யூட்டான பசங்களா? அம்மாவோட ஜெராக்ஸ்ல பொண்ணு, வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்

Actress Saranya Mohan’s family photo: 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர் மைக் மோகனின் மகள் தான் நடிகை சரண்யா மோகன். தற்போது சரண்யா மோகனின் ஃபேமிலி புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் அவரது மகளை பார்த்தால் அப்படியே சரண்யா மோகனின் ஜெராக்ஸ் மாதிரியே இருக்கிறார் என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

காதலிக்கும் மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சரண்யா மோகன், அதைத்தொடர்ந்து இளம் நடிகையாக வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோயின் ஆகவும், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து வினைய் நடித்த ஜெயங்கொண்டான், விஜய்யின் வேலாயுதம் படத்திலும் அவருக்கு தங்கச்சியாக நடித்து தளபதி ரசிகர்களால் கொண்டாட கூடிய நடிகையாக இருந்தார்.

அது மட்டுமல்ல படத்திலும் கதாநாயகியின் தங்கையாக நடித்து அசத்தினார். அதன் பின் சரண்யா மோகன் தனது நீண்ட நாள் காதலரான மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆனந்த பத்மநாபன் என்ற மகனும், அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர்.

Also Read: திடீரென தளபதி இறக்கிய புதிய கார்.. வீட்டிலிருக்கும் பழைய ரோல்ஸ்- ராய்ஸை ஒதுக்க காரணம்

நடிகை சரண்யா மோகனின் ஃபேமிலி புகைப்படம்

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கக்கூடிய சரண்யா மோகன் சில வருடத்திற்கு முன்பு உடல் எடை அதிகமாகி குண்டாக தெரிந்தார். ஆனால் இப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் செம ஸ்லிம் ஆகி ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கிறார். இவருடைய குழந்தைகளும் முன்பு கை குழந்தைகளாக இருந்தனர்.

ஆனால் இப்போது சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா என ஆச்சரியப்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல இந்த ஃபேமிலி புகைப்படத்தில் எல்லோரும் பச்சை நிற உடையில் பார்க்கும்போதே கண்ணுபடும் அளவுக்கு இருக்கிறது. அதே போல் சரண்யா மோகனும் தன்னுடைய உடல் எடையை குறைத்து இப்போது பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். இதனால் நிறைய சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டிருப்பதால், இனி வரும் படங்களில் சரண்யா மோகனை பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம்

Actress Saranya-Mohan's-family-photo-cinemapettai
Actress Saranya-Mohan’s-family-photo-cinemapettai

Also Read: விஜய்யிடம் செம திட்டு வாங்கிய வெங்கட் பிரபு.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனே!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்