Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குண்டாக இருந்த உடம்பை எலும்பும் தோலுமாக குறைத்த சனுஷா.. வேற லெவல் சேஞ்சு!

sanusha

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா(Sanusha). அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த காசி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார்.

பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார். மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார்.

இறுதியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

sanusha-cinemapettai

sanusha-cinemapettai

முன்னர் தன்னுடைய உடல் எடையை பற்றிக் கவலைப்படாமல் குண்டாக கொழு கொழுவென இருந்தார். ஆனால் பல ரசிகர்கள் இவரை கேலி கிண்டல்கள் செய்து வந்தனர்.

sanusha-cinemapettai-01

sanusha-cinemapettai-01

இதனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.

Continue Reading
To Top