ரேணிகுண்டா பட நடிகை தற்கொலை முயற்சி.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியான திரையுலகம்

பாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் சமீப காலமாகவே தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சியான தகவல்கள் வரிசையாக வெளிவருகிறது.

அப்படியிருக்க தற்போது ‘ரேணிகுண்டா’ படத்தின் கதாநாயகி சனுஷா தற்கொலைக்கு முயன்றுள்ள பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் சனுஷா இந்த கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், தனது தம்பியை மனதில் நினைத்து அந்த முடிவை கைவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

இப்படி சினிமா துறையில் இருக்கும் பல பேர், பட வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே இப்படி மன அழுத்தம் ஏற்படுவது அனைவருக்கும் சகஜம், அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் அதிலிருந்து விடுபட முடியும்.

ஆகையால் நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த தகவலை வெளியிட்டதற்கு காரணம் என்னவென்றால், யாரும் இப்படி போன்ற தவறான முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காகவே என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் சனுஷா.

எனவே ‘கொடி வீரன்’ படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்த சனுஷாவின் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொண்டிருக்கையில், இந்த செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.