Connect with us

Cinemapettai

வலிமை அஜித்துக்கு கெத்தாக பெயர் வைத்த வினோத்.. படத்தை புகழ்ந்து தள்ளிய மாஸ்டர் நடிகை

thala61-ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை அஜித்துக்கு கெத்தாக பெயர் வைத்த வினோத்.. படத்தை புகழ்ந்து தள்ளிய மாஸ்டர் நடிகை

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் கிட்டத்தட்ட நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இந்த வருடம் வலிமை படம் வெளியாகிவிடுமா என்ற சந்தேகத்திலும் இருக்கின்றனர்.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருகிறது வலிமை. இதை வலிமை படத்தில் நடித்த பலரும் பல பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும்தான் மீதி உள்ளது. மற்றபடி படம் மொத்தமும் ரெடியாகி விட்டதாம். இந்நிலையில் இந்த படத்தில் மாஸ்டர் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா வலிமை படத்திலும் நடித்துள்ளார்.

அதில் தல அஜித் கஷ்டப்பட்டு ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக நடித்துள்ளதாகவும், வலிமை படத்தில் அஜீத்தை பார்க்கும் போது 15 வயது குறைந்தது போல் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிப்பாக தல அஜித்தின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக வலிமை இருக்கும் எனக்கூறி அஜித் ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார் நடிகை சங்கீதா. மாஸ்டர் படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு கணிசமான ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என பெயர் வைத்துள்ளார்களாம். படம் ஆரம்பிக்கும் போதே இது ஒரு போலீஸ் கதை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

valimai-cinemapettai

valimai-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top