1990 ஆம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடித்த சங்கீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம்.  1978 ஆம் ஆண்டில் ‘சிநேகிதம் ஒரு பெண்ணோ’ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சங்கீதா திரையுலகில் அறிமுகமானார்.தமிழ் மொழியில் ‘இரத்தத்தின் இரத்தமே’ என்கின்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் பல படங்களில் நடித்தார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி  படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலமும் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும்  நடித்து பிரபலமானவர்

முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக  படத்தின் நிர்மலா மேரி கதாபாத்திரம் தான் . தனது திறமையான  நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த சங்கீதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் 2000 ஆம் ஆண்டு   ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார்.