Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை சந்தியாவின் தற்போதைய நிலை தெரியுமா? இப்படி ஒரு நோயால் தினமும் அவதி
2004-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பால் அனைத்து இளைஞர்களையும் கட்டிப்போட்டவர். குறைந்த செலவில் அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுத்த படம் காதல். ஆனால் இதன் பிறகு முன்னணி நாயகியாக வரவேண்டிய சந்தியா கதை தேர்வில் சொதப்பியதால் சினிமாவில் ஓரத்தில் தள்ளப்பட்டார்.
இனி சினிமா வேலைக்காகாது என்று கடந்த 2015-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணமான ஒரு வருடத்திலேயே இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன்பிறகு சந்தியா ஒரு புதுவிதமான நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியாத உண்மை.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே போஸ்ட்பார்டம் புளுஸ்(postpartum blues)என்ற மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் புதுவிதமான விஷயம் என்னவென்றால் மன அழுத்தம் மட்டுமின்றி மாலை 5 மணி முதல் 7 மணி வரை காரணமே இல்லாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார்.
இதனால் பெரிதும் அவதிக்கு உட்பட்ட சந்தியா தற்போது அந்த நோயிலிருந்து குடும்பத்தினர் ஆதரவால் முற்றிலும் விடுபட்டு விட்டார். இதனால் இந்த நோய்க்கான விழிப்புணர்வை புதிதாக திருமணம் செய்யும் நபர்களிடம் கூறி வருகிறார். சுமார் இரண்டரை ஆண்டு காலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சந்தியா.
