Connect with us

Cinemapettai

அங்க டாட்டூ குத்துனதே தப்பு சமந்தா.. உத்து பார்த்து விளக்கம் கூறிய ரசிகர்கள்

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அங்க டாட்டூ குத்துனதே தப்பு சமந்தா.. உத்து பார்த்து விளக்கம் கூறிய ரசிகர்கள்

தற்போதைய தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் லக்கி நாயகி சமந்தா தான். சமீபகாலமாக சமந்தா நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வசூல் ரீதியாக பெரிய கலெக்ஷன் பெற்று வருகிறது.

இதனால் திருமணத்திற்கு பிறகும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிலர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவின் உறுதுணையால் தொடர்ந்து சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடச் செய்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தார்.

samantha-tattoo-01

samantha-tattoo-01

தனது உடம்பின் வலது பக்கத்தில் பச்சை குத்தியதை ரசிகர்களுக்கு காட்டும் படி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனை சமந்தா ரசிகர்கள் போட்டியாக எடுத்துக் கொண்டனர். மேலும் யார் அந்த டேட்டூவில் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடிப்பது என முயற்சி செய்துள்ளனர்.

samantha-tattoo

samantha-tattoo

முயற்சியின் இறுதியில் ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்கள். சமந்தா அந்த இடத்தில் சாய் என பச்சை குத்தி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் இதனை விண்வெளிக்கு ராக்கெட் விட்டதைப் போல் கொண்டாடி வருகின்றனர். ஹரி பகவான்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top