Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹிந்தி தெரியும், பேசமுடியாது.. பத்திரிக்கையாளரை தெறிக்கவிட்ட சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இருந்தும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வபோது ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் வழக்கம்போல் சமந்தா ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது இடையில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹிந்தியில் பேசும் படி கேட்டுக்கொண்டார். அதற்கு சமந்தா நெற்றி பொட்டில் அடித்தது போல் ஹிந்தியில் பேச முடியாது என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சமந்தா, தான் தென் இந்தியாவை சேர்ந்தவர் என்பதாலும், என்னால் சரியாக ஹிந்தி உச்சரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இருந்தும் ஹிந்தி தனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

இதேபோல் சமீபத்தில் நடிகை டாப்ஸி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஹிந்தியில் பேச சொன்னதற்கு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா மொமண்ட்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top