Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-xlove

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பிறகு சித்தார்த்தை பற்றி பேசி கணவரை சங்கடத்தில் ஆழ்த்திய சமந்தா.. பிரிந்த காரணத்தை கேட்டு அதிர்ந்த குடும்பம்

சமீபகாலமாக நடிகை சமந்தாவை பற்றி சில சர்ச்சையான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமாக மகாநதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது முன்னாள் காதலர் பற்றி கூறி தனது கணவரையும் கணவரின் குடும்பத்தாரையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சமந்தா திரைக்கு வந்தபோது பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் லிவிங் டுகெதர் முறையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக இருந்தனர் என்பதை அவரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் மனப்பூர்வமாக ஒதுங்கிக் கொள்வதாக பத்திரிக்கைகளில் முறையிட்ட செய்தி சினிமா உலகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 5 வருடங்கள் முடிந்த பின்பு தனது பழைய காதலர் பற்றி பேசியது சமந்தாவின் தற்போதைய கணவர் நாக சைதன்யாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது

மகாநதி பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தான் கண்மூடித்தனமாக ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதனால் பல விஷயங்களை இழந்ததாகவும் தெரிவித்திருந்தார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மிகவும் அசிங்கப்பட்ட தாகவும் கூறியுள்ளார். மேலும் கடவுள் அருளால் தனக்கு நாக சைதன்யா கிடைத்தது தன்னுடைய செய்த பாக்கியம் எனவும் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய முன்னாள் காதலர் பற்றி கூறிய சமந்தாவின் நடவடிக்கைகள் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. தற்போது இந்த செய்தி தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைவர்ஸ்க்கு அவ்வளவு வாய்ப்பில்லை என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top