Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காட்டுத் தீயாகப் பரவிய வதந்தி.. சமந்தாவிற்கு என்னாச்சோ ஏதாச்சோ என பதறிய ரசிகர்கள்

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் தற்போது தெலுங்கில் ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆகையால் இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் அந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர்.

அப்பொழுது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் எதிர்பாராத விதத்தில் விபத்தில் சிக்கி உள்ளனர். இவர்கள் காஷ்மீரின் பஹல்காம் என்ற பகுதியில் குஷி படத்திற்கான முக்கிய ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது அங்குள்ள ஆற்றின் குறுக்கே சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பைக்கில் கடந்து செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டது.

அப்போது நிலை தடுமாறிய பைக் கீழே தவறி விழுந்து இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதனால் பரிதவித்துப் போனா குஷி படத்தின் படக்குழுவினர் உடனே விரைந்து சென்று இருவரையும் பத்திரமாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.

இருப்பினும் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவருக்கும் சற்று அடி பலமாக பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டு அவர்களை ஓய்வு எடுக்கும்படி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அங்கு அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் குணமாகி உள்ளனர் என்பது போன்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் 30 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பின்போது யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை என படக்குழுவினரின் தெரிவித்திருக்கிறது. எனவே இந்த தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் படக்குழு தாமாகவே முன்வந்து சமூகவலைதளங்களில் விளக்கம் அளித்திருக்கிறது.

twit-cinemapettai-

twit-cinemapettai

Continue Reading
To Top