Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசதி இருக்குன்னு இப்படியா பண்றது சமந்தா? திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் தற்போது நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார். இதனால் தெலுங்கு சினிமாவின் லக்கி நாயகியாக பெயர் பெற்றுள்ளார்.
சமந்தா தான் ஆசையாக வளர்க்கும் நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. உடன் அவரது கணவரும் சிறிய குழந்தைக்கு அலங்காரம் செய்து பிறந்தநாள் கொண்டாடுவதை போல ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த அழகிய நாய்க்குட்டி மேக்கப் செய்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடியது பார்ப்போர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம்போல் சமூக வலைதளங்களில் கருத்து சொல்லும் ஆசாமிகள், பணம் இருக்கிறது என்பதற்காக இப்படி எல்லாம் செய்து ஏழைகளின் மனதை நோகடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர்.

samantha-01

samantha-02
