Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த சம்பவம் மட்டும் கண்டிப்பா தளபதி கூட நான் பண்ணுவேன்.. அடம்பிடிக்கும் இருட்டு பட நடிகை
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஓரளவு ரசிகர் பட்டாளங்களை பிகில் படத்தின் மூலம் உருவாக்கி உள்ளார் தளபதி விஜய். இந்த படம் தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து ரசிகர்களிடமும் தரமான வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்களையும் தாண்டி நடிகர்களும் தளபதி விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் புதிதாக இணைந்தவர் இருட்டு பட நடிகை சாக்ஷி சௌத்ரி. தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர், தமிழில் முதல் முறையாக சுந்தர் .சி நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் இருட்டு படத்தில் நடித்துள்ளார்.
ஹாரர் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் ரொமான்டிக் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதில் சாக்ஷி சௌத்ரி, சுந்தர் .சி உடன் அளவுகடந்த ரொமான்ஸ் செய்துள்ளார். அதிலும் லிப் லாக் சீன் தான் உச்சகட்டம்.
இந்நிலையில் தொகுப்பாளர் ஒருவரின் விவகாரமான கேள்விக்கு சற்றும் சளைக்காமல் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் சாக்ஸி. தொகுப்பாளர், உங்களுக்கு யாருடன் லிப்லாக் சீனில் நடிக்க மிகவும் ஆசை என கேட்டதற்கு சற்றும் தயங்காமல் தளபதி விஜய் என பதிலளித்துள்ளார்.
இதைக்கேட்டு தளபதி விஜய்யே ஷாக் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதனை தளபதி ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லையே!
