பிந்துகோஸ், குண்டாத்தி, குண்டு பூசணிக்கான்னு சொல்றாங்க.. நடிகை சாக்ஸியின் குமுறல்

அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகம் உலவி வரும் மாடல் அழகி சாக்ஸி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார்.

இவர் அண்மையில் டிக் டாக் செயலியை தடைசெய்ய வலியுறுத்தியும் தடை செய்த பின் அதற்கு நன்றி தெரிவித்தும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார். காலா, விசுவாசம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

அண்மையில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தனது பழைய போட்டோக்களை கொண்டு ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது “நான் ஸ்கூல் படிக்கும்போது கொஞ்சம் குண்டா இருப்பேன் அப்ப என்ன எல்லாரும் பிந்துகோஸ், குண்டு பூசணிக்கா, குண்டாத்தி என கேலி செய்வார்கள்.

நான் அப்போலாம் என்னோட படிப்பில் தான் கவனம் செலுத்தினேன் இப்பதான் மாடலா மாறி இருக்கிறேன்.

எனவே நாம மத்தவங்க சொல்றத எப்போதுமே கேட்கக்கூடாது நாம நாமளாதான் இருக்கணும் நம்மல கிண்டல் பண்ற உங்கள கண்டுக்க கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.