Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பிரபல நடிகையை கண்டுக்காத ஹீரோக்கள்.. ஆள் தேடி அலையும் பரிதாபம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் பிரபல நடிகர்கள் யாருமே அந்த நடிகையை சீண்டவில்லை என்பது அந்த நடிகையின் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அந்த நடிகையின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்தனர். என்னமோ முதல்முறையாக லவ் பண்ணுவது போல அம்மணி ஆட்டிக்கொண்டு சுத்துவது சரியில்லை என பலரும் பேசி வந்துள்ளனர்.
தனக்கு வாய்ப்பு கிடைக்காததை நினைத்து வருத்தப்பட்ட அந்த பிரபல நடிகை, தனது காதலனை வைத்து படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். பழைய சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலை கொண்டு தற்போது அம்மணி நடித்துவரும் ஒரு திகில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அவருடன் ஜோடி சேர நாயகர்களுக்கு தூதுவிட்டு வருகிறார்களாம். ஆனால் அம்மணி அந்த காதலருடன் அடிக்கும் கூத்தை பார்த்துவிட்டு எல்லோரும் கிட்ட வரக்கூட யோசிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 21 நாள் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு அம்மணி அடிக்கும் கூத்து அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் முழுக்க நாறுகிறதாம்.
போற போக்கில் 21 நாட்களில் குழந்தை பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறுகிறார்களாம். இந்நிலையில் எந்த நடிகரும் தன்னுடன் ஜோடி போட விரும்பாத நிலையில் தான் கேரியரில் உச்சத்தில் இருக்கும்போது அந்த சீக்கிர நடிகருடன் ஜோடி சேர்ந்தார் அந்த நாயகி.
தற்போது அந்த நடிகரோ பல மடங்கு வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் அம்மணி அவரிடம் ஒரு வாய்ப்பு கேட்க, அவரோ நீங்கள் யார் என்பதை போல துரத்தி விட்டாராம். அதற்கு காரணம் அந்த நடிகையின் காதலர் அவரை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி சொதப்பியது தான் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் நாயகியோ, அந்த ஆளு வளர்வதற்கு நான் எவ்வளவு உதவி செய்தேன், ஆனால் தற்போது அதையெல்லாம் மறந்து விட்டு நடந்து கொள்கிறாரே என கவலையில் இருக்கிறாராம் அந்தநாயகி.
