fbpx
Connect with us

Cinemapettai

துணை முதல்வராகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடி.! ஆந்திராவில் ரோஜா மலர்ந்தது

rajini

News | செய்திகள்

துணை முதல்வராகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடி.! ஆந்திராவில் ரோஜா மலர்ந்தது

ஆந்திராவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முதுகெலும்பாக இருந்த நடிகை ரோஜாவை துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த 95% இடங்களில் இந்த கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா தன் அரசியல் துரோகிகளை வெறித்தனமாக வேட்டையாடி உள்ளார் என்பது  இந்த தேர்தல் உறுதிப்படுத்தி விட்டதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

ஆந்திராவின் துணை முதல்வர் ரோஜா MLA வீரமங்கையே தமிழகத்தின் தங்கமே அவர்களுக்கு என் மனம் மார்ந்த நல் வாழ்த்துகள் என்று ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

அவருக்கு உலக அளவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார். இதனை தமிழக தலைவர்களும் பின்பற்றினால் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்ப்பை பெறலாம்.

ஜெகன்மோகன் ரெட்டி போன்ற நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைக்க மாட்டார்களா என்ற ஒரு  ஏக்கம் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top