நெடு நெடுவென வளர்ந்த ரோஜா மகள் புகைப்படம்.. வரிசை கட்டி படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் நடிகை ரோஜாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. 80, 90 காலகட்டங்களில் வலம் வந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பலமுறை ஜோடி போட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். பின்னர் பெப்ஸி யூனியன் தலைவர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்திவரும் ரோஜா அங்கு ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சமூக சேவைகளை செய்து வருகிறார்.

actress-roja-daughter-cinemapettai
actress-roja-daughter-cinemapettai

அதுமட்டுமில்லாமல் ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுட்டிப்பெண் போலிருந்த ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா(Anshumalika) தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார்.

actress-roja-daughter-cinemapettai-01
actress-roja-daughter-cinemapettai-01

ஒரு நடிகையின் மகள் வளர்ந்துவிட்டால் தயாரிப்பாளர்கள் சும்மா இருப்பார்களா. உங்களைப் போலவே உங்களது மகளையும் பெரிய ஹீரோயின் ஆக்கிவிடுகிறோம் என ரோஜா வீட்டு முன்பு தினமும் பல தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கிறார்களாம்.

actress-roja-daughter-cinemapettai-02
actress-roja-daughter-cinemapettai-02

சும்மா சொல்லக்கூடாது. ரோஜாவின் மகளும் இன்றைய தேதியில் இருக்கும் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் செம அழகாக உள்ளார். எப்போதுமே கொழுக்மொழுக் என இருக்கும் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் டிமாண்ட் ஜாஸ்தி என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.