fbpx
Connect with us

நடிகை ரோஜா அபார வெற்றி..! எந்த தொகுதி? எவ்வளவு ஒட்டு வித்தியாசம் தெரியுமா?

roja

Politics | அரசியல்

நடிகை ரோஜா அபார வெற்றி..! எந்த தொகுதி? எவ்வளவு ஒட்டு வித்தியாசம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரோஜா. அதன்பிறகு உழைப்பாளி ,வீரா, ராசையா,காவலன், கில்லாடி ,என் வழி தனி வழி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பது மட்டுமல்லாமல் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார்.

மக்களவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரான காலி பானுபிரகாஷ் 76,818 வாக்குகள் மட்டும் பெற்றார்.

இதனால் ரோஜா 2,651 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரோஜா வெற்றி பெற்றதால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இதைப் பற்றிய தகவல் இன்னும் ரோஜா வெளியிடவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top