fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஞ்சித் படங்களில் தலித் நடிகர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா? ரகசியம் உடைக்கும் ரித்விகா

pa-ranjith-ryithvika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஞ்சித் படங்களில் தலித் நடிகர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா? ரகசியம் உடைக்கும் ரித்விகா

கருப்பர் கூட்டம் பிரச்சனையில் அனைவருடைய பார்வையும் சென்றது இயக்குனர் ரஞ்சித் மீதுதான். அவர்தான் அடிக்கடி ஏதாவது ஒரு அரசியல் சமூகக் கருத்துக்களையும், தலித் மக்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார்.

அவர் நல்ல முறையில் அவர்களுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூட பேசியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து சாதி சம்பந்தமாக பிரச்சனைகள் வரும்போது அனைவருடைய பார்வையும் அவரின் மீது தான் உள்ளது.

சமீபத்தில்கூட கந்த சஷ்டி கவசத்தை தவறாக பேசிய நபர்களை பேச தூண்டி விட்டதே ரஞ்சித் தான் என்பதைப்போல கட்டுக் கதையை உருவாக்கி விட்டார்கள். அது சம்பந்தமாக ரஞ்சித் எந்த கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் ரஞ்சித் தயாரிக்கும் படங்களும் அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களும் ஏன் அவர் எடுக்கும் படங்கள் கூட தலித் மக்களைப் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருவதாக கோலிவுட்டில் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

மக்களிடமும் அந்த பிம்பம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிப்பட்டு வருகிறது. அதேபோல் அடிக்கடி தலித் சமூகத்தைச் சேர்ந்த நடிகையான ரித்விகாவை சமூக வலைதளங்களில் அவரது ஜாதியை வைத்து அவரிடம் சண்டை போடும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

அதற்காக பல ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை அவரிடம் எழுப்பி வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், ரஞ்சித் தலித் நடிகர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு தருவாரா என கேட்டுள்ளார். அதற்கு ரித்விகா அவர் அப்படி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரஞ்சித்தின் மீது சாதி குறியீடுகள் வைக்கப்படுவதால் அவரே அதுகுறித்து விளக்கம் அளிப்பது நல்லது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top