fbpx
Connect with us

Cinemapettai

அமெரிக்க காதலரை மணம் முடிக்க தயாரான தனுஷ், சிம்பு பட நாயகி. போட்டோ உள்ளே.

Photos | புகைப்படங்கள்

அமெரிக்க காதலரை மணம் முடிக்க தயாரான தனுஷ், சிம்பு பட நாயகி. போட்டோ உள்ளே.

ரிச்சா கங்கோபாத்யாயா

டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இந்தியா வந்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ராணாவின் லீடர், பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்தார். தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா .

richa

பின்னர் படங்களுக்கு திடீர் என முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பிச் சென்ற ரிச்சா. அங்கு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ புனித லூயிஸ் ஓலின் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி. ஏ. முடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கூட மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என ட்விட்டரில் கேள்வி எழ. சினிமா என்பது குறிகிய கால விஷயம் தான் எனக்கு, மீண்டும் நடிக்க வரமாட்டேன் எனவும் பதிவிட்டார். அவர் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடுவார் என்றே நாம் நினைத்தோம்.

Richa Gangopadhyay

அதே போல் சமீபத்தில் அவர் தன் ட்விட்டரில் “எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. இவர் தான் ஜோ. எனது வருங்கால கணவர். ஒருவணிக பள்ளியில் சந்தித்துக்கொண்டோம். 2 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தோம். என் வாழ்வில் அடுத்த நிலைக்கு ஆர்வமாக உள்ளே. இன்னும் திருமண நாள் முடிவு செய்யப்படவில்லை’ என பதிவிட்டுள்ளார் செய்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் ரிச்சா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top