fbpx
Connect with us

2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று தற்போது குழந்தை பெற்ற நடிகை ரேவதி? இது தான் காரணமாம்!

revathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று தற்போது குழந்தை பெற்ற நடிகை ரேவதி? இது தான் காரணமாம்!

80களில் தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய நடிகைகளில் ரேவதிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்தால் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, பிரபு ஆகியோருடன் ஜோடி போட்டார்.

அதுமட்டுமில்லாமல் ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்ற ஒரே தமிழ் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி 1988 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு தற்போது வரை ரேவதி தனியாகத் தான் வாழ்ந்துவருகிறார்.

சமீப காலமாக திரைப்படங்களில் கவனம் செலுத்தியுள்ள ரேவதி குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ரேவதி.

அதைப்பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, டெஸ்ட் டியூப் மூலம் தான் குழந்தை பெற்றேன் என ஓபன் ஆக தெரிவித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் தானே.

அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ரேவதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது மொத்த சொந்தமும் அந்த ஒரே ஒரு பெண் குழந்தை தான் என அதன் மீது பாசத்தைக் கொட்டி வளர்த்து வருகிறார் ரேவதி.

Continue Reading
To Top