fbpx
Connect with us

Cinemapettai

பிரேம்ஜிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நாயகி.. முரட்டு சிங்கிளா இருந்தாலும் மச்சம் இருக்கு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரேம்ஜிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நாயகி.. முரட்டு சிங்கிளா இருந்தாலும் மச்சம் இருக்கு

இசை சுனாமி என பெயர் எடுத்தவர் பிரேம்ஜி. எதார்த்தமான தன்னுடைய காமெடி நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். இந்நிலையில் அவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் ஆட்டோ சங்கர் எனும் பிரபல வெப்சீரிஸ் நடிகை ஸ்வயம் சித்தா என்று நாயகி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் புரோடக்சன்ஸ் மூலம் சமீர் பரத் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்தப் படம் கிராம புறத்தை பின்புலமாகக் கொண்டு முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையில் உருவாகி வருகிறது.

இதற்கு முன் பிரேம்ஜியின் மாங்கா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வெங்கட்பிரபு இயக்கிய பெரும்பாலான படங்களில் இரண்டாவது ஹீரோ அளவுக்கு நடித்திருப்பார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் புதிய இணைப்பாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபதி இணைந்துள்ளார். புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பெரிதும் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B6SY9x9A5_r/?utm_source=ig_web_copy_link

முரட்டு சிங்கிள் ஆக இருந்த நீங்க இப்படி பண்ணலாமா என அவரது ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top