சாக்கு மூட்டை மாதிரி இருக்கும் உடம்பை முதலில் குறை என்று இயக்குனராகத் துடிக்கும் நடிகையிடம் அவருக்கு நெருக்கமான ஹீரோ தெரிவித்துள்ளார்.

இளம் நடிகை ஒருவர் இயக்குனராகத் துடிக்கிறார். ஆள் பூசினாற் போன்று இருப்பார். அவரைத் தேடி இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின், இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரங்கள் வருகிறதாம்.
ஏற்கனவே அம்மணி இரண்டாவது, மூன்றாவது ஹீரோயினாக வேறு நடித்துவிட்டார். அது என்ன என்னை பார்த்தா எப்படி தெரியுது.

எனக்கு அழகு இல்லையா, இளமை தான் இல்லையா, நான் ஏன் முதல் ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்று கோலிவுட்டில் தனக்கு நெருக்கமான ஹீரோவும், இயக்குனருமான அந்த நண்பரிடம் கூறியுள்ளார்.

நடிகையின் குமுறல்களை கேட்ட ஹீரோவோ முதலில் சாக்கு மூட்டை மாதிரி இருக்கும் உடம்பை குறை அதன் பிறகு வாய்ப்பு தானாக வரும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.இதையடுத்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் நடிகை.