Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் பிகில் நடிகை.. FIR போட ரெடி ஆகிட்டாங்க
எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவின் தனிஒரு நாயகனாக தடம் பதித்தவர் விஷ்ணு விஷால். என்னதான் பெரிய குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவருடைய விடா முயற்சியால் தற்போது தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் வெளியான சிலுக்குவார்பட்டிசிங்கம் மற்றும் ராட்சசன் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து FIR என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆறுமாதம் ஓய்வில் இருந்தார். தற்போது குணமாகி படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை ரெபா மோனிகா நடிக்கிறார்.
அவருடன் மஞ்சிமா மோகன் மட்டும் ரைசா வில்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். இவருடைய நடிப்பில் அடுத்ததாக ஜெகஜால கில்லாடி என்ற படம் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
