தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்க இருப்பதாகவும், மேலும் விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்து சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற உப்பெண்ணா படத்தின் தமிழ் ரீமேக்தான் எனவும் செய்திகள் கிடைத்தது.
இந்நிலையில் அந்த படத்திற்கு ஏகப்பட்ட போட்டிகள் கோலிவுட் வட்டாரங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என விஜய் சேதுபதி எப்போதே தெரிவித்துவிட்டார்.
ஒருவேளை விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவுக்கு வந்தால் அவருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என ராட்சசன் படத்தில் விவகாரமான காட்சியில் நடித்த 17 வயது ரவீனா தாகா என்ற நடிகை குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க தற்போது தளபதி விஜய்யின் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அடுத்தடுத்த அவரது படங்களில் நடிக்க இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.
விஜய் அவ்வளவு சீக்கிரத்தில் தன்னுடைய மகனை சினிமாவில் களமிறக்கமாட்டார் என்று விஜய் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. அதற்கு காரணம் மகன் சினிமாவுக்கு வந்து விட்டால் தன்னை சினிமாவை விட்டு போக சொல்வார்கள் என்பதும் அவரது மனதில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.