Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமா வாய்ப்புக்காக டிக் டாக்கை கையில் எடுக்கும் ராஷ்மிகா.. ஒரு டான்ஸ் போட்டு வீடியோ
கன்னட மொழியில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ரஷ்மிகா மந்தானா. விஜய் தேவரகொண்டா உடன் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.
இதனால் தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உண்டு. அனைத்து படங்களிலும் குடும்ப கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை வைத்திருந்தார்.
ஆனால் இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் ‘பாக்கியராஜ் கண்ணன்’ இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு ஜோடியாக சரிலெரு நீகவேறு என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் சோ க்யூட் என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. அதற்கு டிக் டாக் செய்யும் வகையில் புரோமோஷன் வெளியிட்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா.
அதில் அவர் செய்திருக்கும் டான்ஸ் மூவ்மென்ட் ஒன்றை தனது ரசிகர்களை செய்து அனுப்பும்படி சேலஞ்ச் செய்துள்ளார்.
https://twitter.com/iamRashmika/status/1205466623651414017?s=20
