Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு அவர் மீது தான் கொள்ள ஆசை.. தமிழ் நடிகரை கைகாட்டிய ரஷ்மிகா
தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் மீது உள்ள காதலினால் ரசிகர்கள் புரியாத மொழி படங்களை கூட தேடித்தேடி பார்த்து வருகின்றனர்.
ரஷ்மிகா மந்தனா ஏற்கனவே நடிகர் ஒருவரின் மீது காதல் வயப்பட்டு பின்னர் பிரேக் கப் செய்துகொண்டார். தெலுங்கில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வரும் ரஷ்மிகா முன்னணி நடிகர்கள் அனைவருடனும் தொடர்ந்து ஜோடி போட்டு வருகிறார். இது அங்குள்ள நடிகைகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் உங்களுக்கு யார் மீது கிரஷ் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, தனக்கு சிறுவயதிலிருந்தே தளபதி விஜய் மீதுதான் கிரஷ். தளபதி விஜய்யை எனக்கு அவ்வளவு பிடிக்கும் என ஆசை பொங்க கூறியுள்ளார்.
ஒரு இளம் நடிகைக்கு முன்னணி நடிகரின் மீது இவ்வளவு ஆசையா என மொத்த சினிமா உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. விரைவில் கார்த்தி ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்மிகாவின் முதல் தமிழ் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
தளபதி நா யாருக்கு தான் பிடிக்காது.!
