Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஷ்மிகா திருமணம் நின்றதற்கு பிரபல நடிகருடன் இருந்த நெருக்கமா? அவரே கூறிய பதில்
தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. மொழி புரியவில்லை என்றாலும் இவர் நடித்த மற்ற மொழி படங்களில் தேடித்தேடி தமிழக இளைஞர்கள் பார்த்து வருகின்றனர்.
மேலும் இவர் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தமிழை ரசிக்க பலர் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறும்புத்தனமான அவரது செய்கைகள் படத்தில் மட்டுமல்லாது பேட்டிகளின் வாயிலாகவும் பல லட்சம் ரசிகர்களை சேர்த்தது.
இந்நிலையில் இவரது உண்மை காதல் பற்றியும் திருமணம் நிச்சயமாகி நிறுத்தப்பட்டதை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பிரபல கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரஷீத் என்பவரின் மீது காதல் வயப்பட்டதாக கூறியிருந்தார்.
மேலும் சினிமாவில் சம்பந்தமில்லாத ஆட்களுடன் தான் திருமணம் செய்ய வேண்டும் என தான் நினைத்தகாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கூறிய ரஷ்மிகா, சினிமா சம்பந்தப்பட்ட நபராக இருந்தாலும் சற்று வித்தியாசமானவர் என்பதால் அவர் மீது காதல் தோன்றியது.
மேலும் அவருக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்பட்டது உண்மைதான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இரண்டு ஆண்டுகள் வேண்டும் என நினைத்தோம். காரணம் இருவரும் அவரவர் சம்பந்தப்பட்ட தொழில்களில் நினைத்த உயரத்தை அடைய வேண்டுமென தங்களுக்குள் பேசிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு வருடங்கள் கழித்தும் இருவருக்குள்ளும் நேரங்கள் ஒதுக்கி பேசிக்கொள்ள முடியாததால் திருமணத்தை தானே ரத்து செய்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். சினிமாவில் புகழ் கிடைக்க கிடைக்க சொந்த வார்த்தைகளில் சுகம் இருக்காது என்பது ரஷ்மிகா மந்தனா வாழ்க்கையில் உண்மையாகி விட்டது என அவரது வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் இவர் காட்டும் நெருக்கம் தான் இதற்கு காரணம் எனவும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
