நடிகைகள் தங்களது கணவரை விவாகரத்து செய்வது புதிதான விஷயம் அல்ல. அமலாபால், மஞ்சு வாரியர் என பல முன்னணி நடிகைகளை சொல்லலாம். அந்த வகையில் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்தவர் நடிகை ரம்பா.

அண்மையில் தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும், தன்னுடைய கணவர் இந்திரனுடன் தன்னை சேர்ந்து வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்கள் கடும் கோபம்- ஏன் இப்படி செய்தார்கள்?

ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்க அறிவுரை வழங்கி இருந்தது.

அதிகம் படித்தவை:  தன் குழந்தைகளுக்காக நடிபதையே பல வருடங்கள் ஒதுக்கி வைத்த நடிகைகள்!

இறுதியில் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.