Tamil Cinema News | சினிமா செய்திகள்
த்ரிஷாவை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கையும் வளைத்துப் போட்ட பாகுபலி நடிகர்.. மச்சக்காரன் யா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக ரகுல் ப்ரீத் சிங் எனும் புயல் தஞ்சமடைந்துள்ளது. இதனால் முன்னணி நடிகையாக இருந்த சிலர் அவர் மீது பொறாமையில் சுற்றி வருகின்றனர். அவரோ அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
இவர் ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் தோல்வியை தழுவியது. இருந்தும் இவரது மார்க்கெட் விழுந்த பாடில்லை. எப்போதும் ஏறுமுகம்தான் என எகிறிக் கொண்டே போகிறது.
இந்நிலையில் திடீரென ரகுல் பிரீத் சிங், பாகுபலி புகழ் ராணாவை காதலிப்பதாக ஒரு வதந்தி பரவி வந்தது. நமது கேரியருக்கு ஆப்பு வைக்க யாரோ செய்த சதிவேலை என சுதாரித்துக்கொண்ட ரகுல், பிரபல தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நடிகர் ராணாவும் நானும் நெருங்கிய நண்பர்கள்.
இன்னும் சொல்லப்போனால் இருவரது வீடும் மிக அருகில்தான் உள்ளது. அவர் இதற்கு முன் காதலித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு தெரியும். நான் இப்போது சிங்கிள் தான். யாரையும் காதலிக்கவில்லை, அதற்கான நேரமும் என்னிடம் இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
