நான் பதினெட்டு வயசிலயே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதைப் பார்த்திட்டு வந்த வாய்ப்புதான் `கில்லி’னு ஒரு கன்னடப் பட வாய்ப்பு. அது `7ஜி ரெயின்போ காலனி’ படத்துடைய ரீமேக்.

அந்தப் படத்தை ரெஃபரன்ஸுக்குப் பார்த்தபோதுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு ஒவ்வொரு ரீஜனுக்கும் ஒரு சினிமா இருக்குன்னே தெரிஞ்சது. படிச்சது ஆர்மி ஸ்கூல்ங்கறதால, சினிமா அவ்வளவா தெரியாது. சௌத் இந்தியன் சினிமான்னா ஒரு இன்டஸ்ரினுதான் நினைச்சிட்டிருந்தேன்.

மறுத்ததுக்குக் காரணம் என்ன தெரியுமா? நீங்க சொன்னா நம்பவே மாட்டீங்க, அவங்க எனக்குக் கால் பண்ணி “நாங்க உங்களுடைய டேட் ஆஃப் பெர்த் பார்த்தோம்.

அதை வெச்சுப் பார்க்கும் போது, நீங்க வருங்காலத்தில் பெரிய நடிகையா வருவீங்கனு தெரிஞ்சது. அதனால நீங்க இந்தப் படத்தில் நடிக்கணும்னு விரும்பறோம்”னு சொன்னாங்க.

எனக்கு ஒண்ணுமே புரியல. நான் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா, அவங்க எங்க வீட்ல எல்லாம் பேசி, `7ஜி ரெயின்போ காலனி’ பட சீடி அனுப்பி வெச்சாங்க.

நான் படத்துடைய க்ளைமாக்ஸ் பார்த்திட்டு பயங்கரமா அழுது, நான் அந்த க்ளைமாக்ஸ் பண்ணவே மாட்டேன்னு அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதனப்படுத்தினாங்க.

ஆனா, எனக்கு ஒரு ஐடியா, நாம ஏன் சினிமால வர்ற காசை பாக்கெட் மணியா வெச்சுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. `தடையற தாக்க’ படத்தில் நடிச்சதும் அப்படித்தான். அதில் நான் ரொம்ப சின்ன ரோல்.

ஆனா, அப்போ எனக்கு படத்துடைய இயக்குநர் யாரு நடிகர் யாருனு எந்த ஐடியாவும் இல்ல. அப்படி ஆரம்பிச்ச ட்ராவல், இப்போ நிஜமாவே ஒரு நடிகையா வளர்ந்திருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.மேலும்

rakul-preet-singh

சதுரங்க வேட்டை’ படம் முன்னாடியே பார்த்திருக்கேன். படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதற்கப்புறம் ‘தீரன் ‘படத்தில நடிக்கிற வாய்ப்பு வந்த உடனேயே ஓகே சொல்லிட்டேன்.

என்னைத் தமிழ்ப் பொண்ணா அவ்வளவு அழகா காமிச்சிருக்காங்க. ப்ரியாவுக்கும் – தீரனுக்கும் உள்ள ரொமான்ஸ் போர்ஷன் ரொம்ப அழகா இருக்கும். படத்தில் என்னோட பேரு ப்ரியா

ஒவ்வொரு படத்திலும் உங்களை வித்தியாசமாகக் காட்ட எவ்வளவு மெனக்கெடுறீங்க?

அது எனக்கு வர்ற ரோல்லையே தெரிஞ்சுடும். நான் நிஜத்தில் சிட்டி பொண்ணு. ஆனா, `ராரண்டோய் வீடுக்கி சுட்டம்’னு ஒரு தெலுங்கு படத்தில் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணா நடிச்சிருப்பேன்.

rakul-preet-singh

அதே மாதிரி தீரன் படத்திலும் வித்தியாசமான ரோல்தான். என்னோட பாடி லாங்குவேஜ் முதற்கொண்டு நிறைய விஷயம் மாத்திக்க வேண்டியிருந்தது. நடிப்புங்கறது யாரும் சொல்லிக்கொடுத்து வரவழைக்க முடியாது.

நாமளே வளர்த்துக்க வேண்டியதுங்கறது என்னுடைய நம்பிக்கை. நானே பல நபர்களிடமிருந்து கத்துக்கறேன். உணர்வுகள, கேமிராவா ஃபேஸ் பண்றதுல என ஒவ்வொண்ணா கத்துக்கிட்டிருக்கேன்.

நான் இந்த ரோலுக்கு செட் ஆக மாட்டேன்னு ஒரு பேச்சு எழாத அளவுக்கு எல்லாக் கதாபாத்திரத்துக்கும் பொருந்துவதற்கு உழைக்கறேன்.