தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புரட்சியின் போது மாணவர்களும், இளைஞர்களும் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மாணவர்களின் முழக்கத்தை தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் முடிவு எடுத்தன.

இதனால் தமிழகத்தில் கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. மேலும் உள்நாட்டு இயற்கை பானங்களின் மீது மக்கள் பார்வை திரும்பியது.

அதிகம் படித்தவை:  ஸ்கூல் யூனிபார்மில் கலக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! டீச்சர் யார் தெரியுமா.!

இந்நிலையில் சமீபத்தில் பெப்சி நிறுவனம் தமிழில் பெயரை மாற்றி கெத்து என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டது.
இதற்கிடையே நடிகை ராதிகா கோக் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வலைத்தளங்களில் நடிகை ராதிகாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா அது பழைய விளம்பரம்.
இப்போது அதை யாரோ வேண்டுமென்றே வெளியிட்டிருக்கிறார்கள் என்று சத்தியம் செய்யாத குறையாக அழுகிறாராம்.